கும்பம் ராசி அன்பர்களே…! இன்று ஆரோக்கியம் மேம்பட்டு அனுகூலமான நாளாகவே இருக்கும். எதையும் திறம்பட செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். தனவரவு மிக சிறப்பாக இருக்கும். பெண்களிடம் எதிர்பார்த்த லாபங்கள் ஏற்படும். இன்று மருத்துவச் செலவுகள் எதுவும் இல்லை. உடல் ஆரோக்கியம் உங்களுக்கு மிக சிறப்பாக இருக்கும். இதனால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். குடும்பப் பிரச்சினைகள் தீரும். நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். எதிலும் எப்போதும் கவனமாக மட்டும் இருங்கள் அது போதும்.
ஏதேனும் மனக்கஷ்டம் அவ்வப்போது வந்து செல்லும். எதைப்பற்றியும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருங்கள் அது போதும். பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக இருங்கள். நகைகளை தயவுசெய்து இரவல் கொடுக்க வேண்டாம். எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட சின்ன தாமதத்திற்க்கு பின் தான் முடியும். எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்காமல் காரியத்தை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்யுங்கள். இன்று காதலர்கள் பொறுமை காக்க வேண்டும். மிக மிகப் பெருமை பொறுமை அவசியம். வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம்.
குடும்பத்தாரிடம் அன்பாக பேசுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.இன்று சகோதர வகையில் ஒற்றுமை இருக்கும். ஆனால் தந்தையின் வழியில் மட்டும் சில பிரச்னைகள் வந்து செல்லும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ஒரு ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்