மாற்றுத்திறனாளிகளை மனதில்கொண்டு அவர்களுக்கு என்று தனியாக சிறந்த முறையில் விளையாட்டு திடலை அபுதாபி கடற்கரையில் 2 லட்சம் செலவில் அமைத்துள்ளது.
அபுதாபியில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக கடற்கரை பகுதியில் விளையாட்டு மைதான திடல் உள்ளது. அதேபோன்று சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் மீது அரசு அதிக அக்கறை கொண்டுள்ள வகையில் பிரத்யோகமான முறையில் அவர்களுக்கென்று சிறந்த முறையில் புதிய விளையாட்டுத் திடல் கடற்கரை பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 22 லட்சம் நிதி செலவிடப்பட்டுள்ளது .
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு வீல் சேருடன் இந்த இடத்திற்கு வந்து செல்வதற்கான வசதிகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது .அவர்கள் தங்களின் கார்களை நிறுத்தவும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் மற்றும் அவரது குடும்பங்களும் விளையாடுவதற்கு ஏற்றவாறு உபகரணங்கள் அமைக்கப்பட்டு 1648 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால் அவர்கள் தன் உடல் நலத்திற்கு ஏற்றவாறு விளையாடவும் தங்கள் நலனை மேம்படுத்திக் கொள்ளவும் மிகச்சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமைக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு சர்வதேச தரத்தின் அளவிற்கு வசதிகள் கொண்டுள்ளது. மேலும் கைப்பந்து கூடைப்பந்து போன்றவை அவர்களின் வசதிக்கேற்றவாறு மேலும் பல்வேறு விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகள் அதை மனதில் கொண்டு அவர்கள் விளையாடும் போது தவறி ஆளும் அடி படாதவாறு ரப்பர் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெயிலின் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கூரைகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அபுதாபி கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு என அமைக்கப்பட்ட விளையாட்டு திடல் அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு தளமாகவும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.