Categories
மாநில செய்திகள்

நண்பர்களை ஏமாற்றுவதற்காக…. விபரீதமான சிறுவனின் விளையாட்டு…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

ஏப்ரல் 1-ஆம் தேதி தனது நண்பர்களை ஏமாற்றுவதற்காக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நடித்த சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலத்திலுள்ள ஆலப்புலா பகுதியில் சித்தார்த் அஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய்குமார் என்ற 12ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருந்தான். இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு உணவு அருந்தி விட்டு தனது அறைக்குள் சென்ற அஜய்குமார் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அஜய் குமாரின் தாயார் அவரது அறைக்குள் சென்று பார்த்தபோது அஜய் குமார் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அஜய்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு ஆலப்புலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் அஜய்குமார் இறந்த தினத்தன்று அவரது அறையில் உள்ள அவரது செல்போன் இயங்கிய நிலையில் இருந்துள்ளது. அதாவது ஏப்ரல் 1ஆம் தேதியன்று தனது நண்பர்களை ஏமாற்றுவதற்காக அஜய்குமார் தற்கொலை செய்யப்போவதாக நடித்ததும், எதிர்பாராத விதமாக அஜய்குமார் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |