மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களுக்கு ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் பொருள் வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் ரேஷன் கடையில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டுமம். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் ஏற்கனவே ரூ.3,280 கோடி செலவில் பல்வேறு சிறப்பு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. அதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களையும் வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
அதன் அடிப்படையில், மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களுக்கு ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஊரடங்கு காலத்தில் உணவு பொருட்கள் இருப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.