டெல்லியில் யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விட வாய்ப்புள்ளது.
டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. அதாவது அரியானாவின் ஹதினிகுண்ட் அணையில் இருந்து நொடிக்கு நாலாயிரத்து 353 கன அடி நீர் யமுனையில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் கடல் மட்டத்தில் இருந்து 204 மீட்டராக உயர்ந்துள்ளது.
இந்த நீர் மட்ட அளவு இன்னும் அரைமீட்டர் உயரத்துக்கு உயர்ந்தால் கூட வெள்ள எச்சரிக்கை கொடுக்கப்படும். சென்ற வருடம் ஹதினிக்குண்ட் அணையில் இருந்து நொடிக்கு 8,00,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்ட போது டெல்லியில் யமுனையில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தது. இதுவரை இருப்பதிலேயே அதிக அளவாக 1978ஆம் வருடம் 207 மீட்டர் 49 சென்டிமீட்டர் உயரத்துக்கு யமுனையில் வெள்ளம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.