Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”… திடீரென்று வெடித்து சிதறிய ஆப்பிள் வாட்ச்… மருத்துவமனையில் பயனாளர்…!!!

அமெரிக்க நாட்டில் ஆப்பிள் வாட்ச் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில் பயனாளர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க நாட்டில் ஒரு நபர் பயன்படுத்தி வந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சின் பேட்டரி அளவு திடீரென்று பெரிதாகியுள்ளது. அதை தொடர்ந்து, வாட்ச் வெடித்து சிதறி விட்டது. அதற்கு முன் வாட்ச்சில் அதிக சூடு இருந்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து அதிக அளவில் புகையும்  வெளியேறியுள்ளது.

வாட்ச் வெடித்து சிதறியதில் அதன் பயனாளர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்நிறுவனம் இந்த பிரச்சனை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |