அரசு பள்ளியில் 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கான கலந்தாய்வும் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கின்ற 7.5% இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞ்ர் ஒருவர் முறையீடு செய்தார்.
முறையீட்டை ஏற்ற நீதிபதிகள் சத்யநாராயணன் – ஹேமலதா அமர்வு மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் நடந்து கொண்டு இருப்பதால் அவசர வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது. மனுவாக தாக்கல் செய்யப்பட்டால் அது விசாரணைக்கு வரும்போது எடுத்து கொள்ளப்பட்டு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.