நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீஸர் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’, ‘ஜெய் பீம்’ திரைப்படம் போட்டியில் வெளியானது இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது.அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 4-ம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்படத்தின் முதல் பார்வை மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீஸர் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் படம் ரிலீசுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருப்பதால் இப்படத்தின் டீஸர் பொங்கலில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.