Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாடா!!… ஒரு வழியா வந்துட்டு… “வாடிவாசல்” பட அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நல்ல செய்தி…. நீங்களே பாருங்க…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்களையும், போராட்டங்களையும் கடந்து தற்போது முன்னணி நடிகராக சூர்யா உயர்ந்துள்ளார். சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு ஜெய்பீம மற்றும் விக்ரம் படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்போது நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் நந்தா மற்றும் பிதாமகன் படத்திற்கு பிறகு உருவாக இருந்த வணங்கான் திரைப்படம் திடீரென நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படமும் நிறுத்தப்பட இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் வாடிவாசல் திரைப்படம் தொடங்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களால் ஷூட்டிங் தாமதம் ஆகிக்கொண்டே செல்லும் நிலையில், தற்போது வாடிவாசல் திரைப்படத்தை கைவிட முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வாடிவாசல் படம் குறித்து பரவிய தகவல்களுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, வாடிவாசல் படம் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. அது வெறும் வதந்தி. எனவே யாரும் அந்த தகவலை நம்பாதீர்கள். வாடிவாசல் படத்தின் ஃப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இனி வரும் மாதங்களில் வாடிவாசல் படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று கூறியுள்ளார். மேலும் இதனால் தற்போது வாடிவாசல் படம் குறித்து பரவிய தகவல்கள் முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |