நேற்று முன்தினம் நடந்த 9வது லீக் போட்டியில்,ஹைதராபாத் அணி வீரரான பேர்ஸ்டோ அடித்த சிக்ஸர் வீடியோ வைரலாக வருகின்றது .
நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. இதில் மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 151 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத், மிடில் ஓவரில் சொதப்பியது.
இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோல்வியை சந்தித்தது. நடந்த போட்டியின்போது ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மும்பை 3வது ஓவரில் பவுலிங் செய்தபோது, பேட்டிங்கில் இருந்த பேர்ஸ்டோ அந்த பந்தை, பவுண்டரி லைனுக்கு வெளியே அடித்தார். அடித்த வேகத்தில் சென்ற பந்து, அங்கிருந்த கண்ணாடி ஃப்ரிட்ஜின் மேல் பட்டு, கண்ணாடி நொறுங்கியது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது.
https://twitter.com/lodulalit001/status/1383455236170260481