அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என எனக்கு தெரியவில்லை. இது அனைவர் மத்தியிலும் எழக்கூடிய ஒரு கேள்விதான்.
மேலும் அமமுகவின் தேர்தல் கூட்டணி அடுத்த ஆண்டு நவம்பர் (அ) டிசம்பரில் அறிவிக்கப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறார். அதிமுக 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவிற்கு பெரிய கட்சியாக இருந்தது. ஆனால் இபிஎஸ் அதனை வட்டார கட்சியாக மாற்றி வருகிறார். வரும் காலத்தில் அது சமூக கட்சியாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று பேசினார். 2024ஆம் ஆண்டு அதிமுக உடனான கூட்டணிக்கு டிடிவி தயாராக இருக்கிறார்