தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் ஏகே61 படத்தில் அஜித் நடித்து வருகிறார். சமீபத்தில் படத்திற்கு “துணிவு” என்று பெயரிடப்பட்டு முதல் பார்வை வெளியானது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அஜித் சில நாட்கள் சுற்றுலா சென்று தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த ஒரு வங்கி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் படத்தில் அஜித் ஹீரோவாக மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து உள்ளது. எனவே இப்படம் வாரிசு படத்துடன் பொங்களுக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் கருதி வந்தனர். ஆனால் இப்படம் பொங்கலுக்கு முன்பு டிசம்பர் மாதமே திரையில் வெளியாகும் என்று ஒரு தரப்பு கூறி வருகிறது. ஆனால் இதில் எந்த தகவல் உண்மை என்பதை தெரியவில்லை. இருப்பினும் இப்படம் விரைவில் வெளியாக இருப்பது மட்டும் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.