Categories
உலக செய்திகள்

ஆப்கானுடனான விமான சேவையை …. தற்காலிகமாக நிறுத்தியது பாகிஸ்தான் ….!!!

ஆப்கானிலிருந்து வெளியேற தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மக்களின் கூட்டம் அலை  மோதுகிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் அங்கு பதற்ற நிலை நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்காக  தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டைவிட்டு தப்பிப்பதற்காக விமானநிலையத்தை  நோக்கி படையெடுக்கின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தவுடன் பல உலக நாடுகளும் சிறப்பு விமானங்கள் மூலமாக தலைநகர் காபூலில் இருந்து தங்கள் நாட்டு குடிமக்களை மீட்டு வருகின்றனர். இதற்கிடையே அண்டை நாடான பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுடனான விமானப்  போக்குவரத்துக்கு சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

Categories

Tech |