Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. கதிரின் “யூகி” டிரைலர் வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஷ் இயக்கத்தில் நடிகர் கதிர் நடித்துள்ள திரைப்படம் “யூகி”. இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். மேலும் நடராஜன் சுப்பிரமணியன், பவித்ர வரலட்சுமி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்து ஜோமின் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இரு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘யூகி’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. யூகி திரைப்படம் வருகின்ற 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Categories

Tech |