Categories
பல்சுவை

ஆபத்தான வைரஸ் நிறைந்த ஆப்கள்…. உங்கள் ஃபோனிலும் இருக்கலாம்….. உடனே செக் பண்ணி பாருங்க….!!!!

உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு ஆஃப் என்றால் அது Google Play Store. இந்த ஆஃப் உள்ளே உங்களுக்கு தேவையான கேம்ஸ், என்டர்டைன்மெண்ட், சோசியல் ஆஃப் போன்ற பல வகையான ஆஃப்கள் உள்ளது. ஆனால் இந்த ஸ்டோர் உள்ளே இருக்கும் ஆஃப் அனைத்தும் உண்மையான பாதுகாப்பு ஆஃப்கள் அல்ல. இவற்றில் பல ஆபத்து நிறைந்த ஆஃப் உள்ளது. இந்த ஆஃப் நீங்கள் டவுன்லோட் செய்தால் உங்களை சில ஆபத்தான வலைதளங்களுக்குள் அல்லது உங்களின் தனிப்பட்ட டேட்டா போன்றவற்றையும் திருடிவிடும். அவ்வாறு ஆபத்தான சில அஆஃப்களின் விவரங்களை பற்றி பார்ப்போம். இந்த ஆஃப் நீங்கள் தெரியாமல் டவுன்லோட் செய்தால் உடனடியாக அதனை டெலிட் செய்து உங்களின் டேட்டா மற்றும் ஸ்மார்ட் போனை காப்பாற்றிக் கொள்ளுங்கள். இந்த ஆஃப் அனைத்தும் Android/Trojan, Hiddenads, BTGTHB எனும் வைரஸ் நிறைந்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த ஆஃப்கள் அனைத்தும் ஒரு மில்லியன் டவுன்லோடு பெற்றுள்ளது. அதன்படி Bluetooth auto connect, Bluetooth app sender, driver: Bluetooth, Wi-Fi, USB, mobile transfer: smart switch ஆகிய ஆஃப் அனைத்திலும் பல வகையான வைரஸ் ஒளிந்து இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்த ஆஃபில் இருக்கும் Ad மூலம் இந்த வைரல் நமது ஃபோன்களில் ஊடுருவும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே இந்த ஆஃப்களில் ஏதாவது ஒன்று உங்கள் போனில் இருந்தால் உடனடியாக அவற்றை டெலிட் செய்து கொள்ளுங்கள். இந்த ஆஃப்கள் உங்கள் ஃபோனில் தேவையில்லாத வலைதளங்களை நீங்கள் ஃபோன் ஆப் செய்திருந்தாலும் திறப்பதாக கூறப்படுகிறது. மேலு இந்த ஆப் அனைத்தும் நமது தனிப்பட்ட விவரங்களை திருடி விற்று அதன் மூலம் வருமானம் பெறுகிறது.

Categories

Tech |