ஜப்பான் தொழில் அதிபர் யுசாகு மோசாவா ஊபர் ஈட்ஸின் டெலிவரி பாயாக செயல்பட்டார்.
விண்வெளியில் நீங்கள் இருந்தாலும் அங்கும் எங்கள் சேவை இருக்கும் என்பதை தெரிவிக்கும்வகையில் ஊபர் ஈட்ஸின் புரொமோஷன் வீடியோ வைரலாகி வருகிறது. இவற்றில் ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர் விண்வெளிக்கு சென்று அங்கு வேலை பார்க்கும் வீரர்களுக்கு உணவை டெலிவரி செய்து உள்ளார். டேட்டா யுகத்தில் உணவு ஆர்டர் செய்யும் ஆப்கள் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஃபுட் ஆர்டர் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி இருந்தன.
இதில் வாடிக்கையாளர்களின் வரவேற்பினால் ஃபுட் ஆர்டர் ஆப் நிறுவனங்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் தங்கள் வியாபாரத்தை தக்க வைத்துக்கொள்ளவும், விரிவாக்கம் செய்யவும் புதுமையான நடவடிக்கைகளை இந்த நிறுவனங்கள் செய்கின்றன. அந்தஅடிப்படையில் ஊபர் ஈட்ஸ் நிறுவனம் வித்தியாசமான வகையில் புரொமோஷனை செய்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது விண்வெளியில் உள்ளவர்களுக்கு ஊபர் ஈட்ஸ் தனது சேவையை வழங்குவது அந்த புரொமோஷனின் மையக்கருத்தாகும். இவற்றிற்காக ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழிலதிபரி யுசாகு மோசாவா, ஊபர் ஈட்ஸின் டெலிவரி பாயாக செயல்பட்டார். அவர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு (ISS)8 மணி 34 நிமிட பயணம் செய்து அங்கு வேலை பார்க்கும் வீரர்களுக்கு உணவை கொடுத்தார் . இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. உணவு பார்சலில் இருந்தது விண்வெளி வீரர்கள் பிரத்யேகமாக உண்ணக்கூடிய பதார்த்தங்கள் என ஊபர் ஈட்ஸ் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
Uber Eats のデリバリーは、進化し続けています。
今、配達していない場所へ、次々と。@yousuck2020 さん、配達ありがとうございます🚀#宇宙へデリバリー #UberEats pic.twitter.com/Sh0PsXXwMX— Uber Eats Japan(ウーバーイーツ) (@UberEats_JP) December 14, 2021