செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதிபதிகள் கடவுளாக மதிக்கப்படுகிறார்கள் இந்த நாட்டில்… மத்திய அமைச்சர் சொல்கிறார், 60 வயதிற்கு மேல் ஆனா பெரியவர்களுக்கு தொடர்வண்டி கொடுத்த சலுகைகள் எல்லாம் கொடுக்க முடியாது, 1500 கோடி இழப்பு வருகிறது என்கிறார்கள். இது எப்படி எடுத்துக் கொள்வது ? நாடு 100 லட்சம் கோடிக்கு மேல கடனில் போய்க் கொண்டிருக்கிறது.
சலுகை என்பது எந்த விதத்தில் வந்தாலும் அதை நாம் ஏற்கக்கூடாது. பொதுவாக நான் ஏற்கவில்லை. மற்றவர்களுக்கு எப்படியோ. அது உயர்ந்த இடத்தில் இருக்கின்ற நீதிபதிகள் அவருக்கு கொடுக்கப்படும் போது… நாம் ஒரு கருத்தை வைக்கும் போது, அது விமர்சனமாக வரும், அது தேவையற்ற சிக்கலை கொண்டு வரும், அதனால் எல்லாரும் சொல்வார்கள் அல்லவா பெரியவர்களாக பார்த்து சொல்வதைக் கேட்டுக் கொண்டு போக வேண்டும் என்று அது மாறி போக வேண்டியதான்.
அறிவு இருக்கின்ற எவருக்குமே தெரியும். இலவசகளால் ஒரு தேசம் வளரவே வளராது. 50 ஆண்டுகளாக இலவசம் கொடுக்கிறார்கள் எப்படி வளரும் ? ஒரு அடிப்படை கேள்வி தானே.. நீங்கள் இத்தனை ஆண்டுகளில் சலுகை, மானியம், போனஸ், இலவசம் இது நான்கை தவிர வேறு ஏதாவது திட்டம் இருக்கிறதா? இதில் ஏதாவது வளர்ச்சி இருக்கிறதா? எப்படி உழைப்பிலிருந்து வெளியேற்றி,
சோம்பேறியாக நாட்டு மக்களை இருக்க வைத்து, உனக்கு ஊதியம் கொடுக்கிறோம் என்று சொல்வதும், இலவசம் தருகிறோம் என்று சொல்வதும், எப்படி இருக்கிறது? எந்த மாதிரி இந்த திட்டம். இது வாக்கை பறிப்பதற்கான வெற்றுக் கவர்ச்சி திட்டம் தானே ஒழிய, வேறு ஏதுமில்லை என தெரிவித்தார்.