Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்களது இதயம் உடைகின்றன…. நாங்கள் நிதி வழங்குவோம்… விராட் -அனுஷ்கா!

அனுஷ்காவும் நானும் கொரோனா நிவாரண நிதிக்கு எங்களது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த வைரஸை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

Fans Are Praising Virat Kohli And Anushka Sharma For Not ...

மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்,  நாட்டில் உள்ள முக்கிய பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என தங்களால் முடிந்ததை நிதியுதவியாகவும், பொருளுதவியாகவும் செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Virat And Anushka Pledge Fund For Fighting Against Coronavirus

அதில், “அனுஷ்காவும் நானும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு(மகாராஷ்டிரா) எங்களது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளோம். மேலும் இந்த நோயினால் பதிக்கப்பட்டவர்களைக் காணும்போது எங்களது இதயம் உடைகின்றன. எங்களது பங்களிப்பு ஒரு விதத்தில் அவர்களது துன்பங்களைப் போக்க உதவும் என்று நம்புகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும் இணைந்து பொதுமக்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திகொள்ளுங்கள் என்றும், தங்களை முடிந்த அளவிற்கு பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றும் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |