ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், எரிவாயு நிறுவனங்கள் நெருக்கடியான நிலையை சாதகமாக்கி லாபம் பெறுவது ஒழுக்கக்கேடு என்று கூறியிருக்கிறார்.
உக்ரைனில் போர் தொடுத்த ரஷ்ய நாட்டின் மீது உலக நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றது. இதற்கு பதிலடியாக, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைத்துக் கொண்டது. இதனால் ஐரோப்பிய ஒன்றியம், எரிவாயு தேவைக்கு அந்நாட்டை சார்ந்திருப்பதை தவிர்க்க தீர்மானித்திருக்கிறது.
இவ்வாறான காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பல நாடுகள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரான ஆண்டனியோ குட்டரஸ் தற்போதைய நெருக்கடி சூழலை பயன்படுத்திக் கொண்டு எரிசக்தி நிறுவனங்கள் லாபம் பெறுவது ஒழுக்கக்கேடு என்று கூறியிருக்கிறார்.
மேலும், உலக அளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, எரிவாயு நிறுவனங்கள் பெறும் லாபத்தில் வரி விதிக்கப்பட்டு, அந்த தொகையை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.