சுவிட்சர்லாந்தில் புகையிலை எதிர்ப்பாளர்கள் சிகரெட் விலையை இரண்டு மடங்கு அதிகப்படுத்த வேண்டும் என்ற பரபரப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் 5.50 பிராங்குகள் என்று விற்பனையாகி வரும் சிகரெட் பாக்கெட்டின் விலை விரைவில் இரு மடங்காக உயர்த்தப்பட வேண்டும் என்று புகையிலை எதிர்ப்பாளர்கள் அமைப்பு கோரிக்கையினை முன்வைத்துள்ளது. அதாவது இளைய சமூகத்தினர் சிகரெட் விலையை 8 முதல் 14 பிராங்குகள் அதிகபடுத்தினால் கட்டாயம் புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்து ஏற்கனவே மற்ற நாடுகளை விட சிகரெட்டுகளை அதிக விலைக்கு தான் விற்பனை செய்து வருகிறது. அதேபோல் பிரான்ஸ் நாடும் அதிக விலைக்கு சிகரெட்டை விற்பனை செய்கிறது.
இதற்கிடையே சுவிட்சர்லாந்தில் புகையிலை தொடர்பான பாதிப்பினால் ஆண்டுக்கு 9,500 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் ஆண்டுதோறும் புகையிலை பாதிப்பால் ஏற்படும் சுகவீனத்திற்கு பல பில்லியன் பிராங்குகள் செலவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சுவிட்சர்லாந்தில் 15 வயதிற்கு மேற்பட்டோர் கால் சதவீதம் பேர் புகை பிடிக்கிறார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.