ஆந்திர மாநிலத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதாகவும், நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.
ஆந்திராவின் கொரோனா பரவலை தடுக்க ,அம்மாநில அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதன்படி தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கிய நிலையில், தற்போது அதிகரித்து காணப்படுகிறது. இதுதொடர்பாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவில் நேற்று 1,288 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆந்திராவில் சுமார் 9 லட்சத்து 4 ஆயிரத்து 548 கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து உள்ளது .
நேற்று ஒரே நாளில் 5 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளதாக தெரிவித்தனர். ஆந்திராவில் தற்போது 8,815 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுமார் 8 லட்சத்து 88 ஆயிரத்து 508 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தனர். இதுவரையில் கொரோனா தொற்றால் 7,225 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.