Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அந்த அலுவலகங்களில்…. வருமான வரித்துறையினரின் சோதனை…. ஈரோட்டில் பரபரப்பு….!!

பிரபல தனியார் நிறுவன அலுவலகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு பிரபல தனியார் மாட்டுத்தீவனம், முட்டை பவுடர் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தனியார் நிறுவன அதிபர் வீட்டிற்குள் 12 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். அவர்கள் வீடு மற்றும் அருகில் உள்ள நிறுவன அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோன்று ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குழும நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆலைகளிலும் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.இவ்வாறு ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.

அதாவது சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்த குழுமம் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்ததாக தெரிகிறது. ஆகவே மொத்தமாக ஒரே நேரத்தில் 35 இடங்களில் சோதனை நடந்ததாக கூறப்பட்டது. இந்த சோதனையின்போது ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்ற விவரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |