Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு பதில் சொல்லுங்க…! அண்ணாமலை மிரட்டுறாரு… ஆவேசமான செந்தில்பாலாஜி …!!

செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நீங்கள் வேலை இல்லாத வெட்டியாக இருக்கும் ஒரு நபரை பற்றி என்னிடம் கேட்க வேண்டாம், அப்படி நீங்கள் கேட்டு பொறுப்பேற்றுக் கொண்டால்,  நான் பதில் சொல்ல தயார். ஆனால் நீங்கள் தனிப்பட்ட முறையில் அந்த வேலையில்லாத வெட்டி நபரிடம் என்ன கேட்கிறேனோ…

அதைக் கேட்டுக் கொண்டு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.நான் ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பாக கூறி இருக்கிறேன், என்னென்ன நான் கேட்டேனோ… நீங்கள் அவரிடம் போய் அதற்கான விளக்கத்தை என்னிடம் சொல்லுங்கள். அதன் பிறகு நான் அண்ணாமலை பற்றி கூறுகிறேன்.

குறிப்பாக எந்தவிதமான மக்கள் செல்வாக்கும் இல்லாத அரசியல் தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக உங்களை பயன்படுத்தி தொலைக்காட்சிகளையும், பத்திரிக்கையும் பயன்படுத்தி ஒரு பொய்யான கருத்துக்களை, தவறான கருத்துக்களை பொதுவெளியில் சொல்லி இருப்பைக் காட்டக் கூடியவர்களுக்கு நான் நேரடித்தை வீணடித்து பதில் சொல்ல விரும்பவில்லை.

ஏற்கனவே நான் கேட்ட கேள்விகளுக்கு அங்கிருந்து பதில் வந்து….  அந்த பதிலை நீங்கள் கேட்டுவிட்டு என்னிடம் சொன்னால் நான் கூறுகிறேன். அமலாக்கத்துறை என்பது ஒரு தனி அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு. அந்த அமைப்பு யாரிடம் விசாரணை நடத்த வேண்டும் ? யாரை கைது செய்ய வேண்டும் என்று விசாரணைக்கு பின்பு அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு.

அந்த அதிகாரத்தினுடைய தனி அதிகாரம் படைத்த ஒரு அமைப்பினுடைய நிர்வாகத்தினுடைய செயல்பாடுகளை ஒரு அரசியல் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் வெளியிடுகிறார்கள், கருத்துக்களை சொல்கிறார்கள் என்றால் எந்த அளவிற்கு மோசமான சூழல் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். மோசமான சூழல் என்பதை விட… மிரட்டக்கூடிய சூழல், ஒரு எச்சரிக்கை விடுத்து…. மிரட்டும் சூழலில் இருக்கக்கூடிய கருத்துக்கள் என்பது நீங்கள் எப்படி என்று பார்க்க வேண்டும்.

நீங்கள் ( பத்திரிக்கையாளர்கள்) (பாஜக மாநில தலைவர் அண்ணாமலை)யை சந்தித்து கேட்டாலும் சரி,  இல்ல உங்கள் நிறுவனத்தை சார்ந்தவர்கள் வேறு மாவட்டங்களில் கேட்டுட்டு சொன்னாலும் சரி,  நான் மூன்று – நான்கு கேள்விகளை முன் வைத்துள்ளேன். அந்த கேள்விகளுக்கு நீங்க கேட்டு அதற்கான விளக்கங்கள் எனக்கு வீடியோ அனுப்புங்க. இதுக்கெல்லாம் இதற்கெல்லாம் பிறகு நான் பதில் சொல்கின்றேன். என தெரிவித்தார்.

Categories

Tech |