Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மடாதிபதி மீது மீண்டும் ஒரு பாலியல் புகார்….. 2 மகள்களின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டதாக கதறும் தாய்….!!!!

கர்நாடக மாநிலத்தில் முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு இருக்கிறார். இவர் மீது 2 பள்ளிச் சிறுமிகள் பாலியல் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் சிவமூர்த்தி முருகா கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது கர்நாடக நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் சிவமூர்த்தி மீது முருகன் மடத்தின் மடாதிபதியில் சமையல் வேலை பார்த்த பெண்மணி பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதாவது அந்தப் பெண்மணி தன்னுடைய 2 மகள்களையும் சிவமூர்த்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, என்னுடைய மகள்களில் ஒருவரை அழைத்துச் சென்று விட்டார் என்று புகாரில் தெரிவித்து கதறியுள்ளார். மேலும் அந்த புகாரின் படி சிவமூர்த்தி மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |