Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளம்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் (வயது 27) ஒருவர் செங்கல்பட்டில் இருக்கும் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகின்றார்.. தற்போது கொரோனா தாக்கம் காரணமாக பொதுமுடக்கம் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதையடுத்து லாரியில் கடந்த 5ஆம்தேதி சொந்த ஊரான இளம்புவனத்திற்கு வந்துள்ளார்.. இவர் சொந்த ஊர் திரும்பிய தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு அவரை வீட்டிலேயே தனிமைபடுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |