Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மனஅழுத்தம்” காவலரை சுட்டு கொன்ற மற்றொரு காவலர்….. சென்னை அருகே பரபரப்பு….!!

சென்னை ஆவடியில் ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் காவலர் ஒருவரை சக காவலர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியில் இயங்கி வரும் ராணுவ பாதுகாப்பு தொழிற்சாலையில்  இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரதீஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று காலை பணி முடிந்து அடுத்த சுற்றுக்கு வந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த காவலாளிக்கும்  இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய்த்தகராறு முற்றிய நிலையில் திரிபுராவை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டதில் பிரதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பணிச்சுமை மற்றும் தூக்கமின்மை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததால் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |