Categories
உலக செய்திகள்

BREAKING : கொரோனா: ”சீனாவுக்கு மேலும் ஒரு விமானம்” இந்தியர்களை மீட்க நடவடிக்கை …!!

கொரானா வைரஸ் சீனாவை தாக்கியுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை 1 விமானம் சென்ற நிலையில் இரண்டாவது விமானமும் செல்ல இருக்கின்றது.

கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் 175_ஆக இருந்த நிலையில் தற்போதைய எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 1,982 பேர் இந்த வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் 9,692 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வகங்களில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள், பணியாளர்கள் என  அனைவரையும் இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகின்றது. இதையடுத்து சீனாவின் அனுமதியை பெற்ற இந்தியா 423 பேர் பயணிக்க  கூடிய ஏர் இந்தியாவின் போயிங் பி747 என்ற விமானத்தை டெல்லியில் இருந்து சீனா_வுக்கு அனுப்பியது.

சீனா செல்லும் இந்த விமானம் சீனாவில் உள்ள இந்தியர்களுடன் நாளை அதிகாலை இந்தியா வர இருக்கின்றது.இதைதொடர்ந்து மேலும் ஒரு விமானத்தை இந்தியா சீனாவுக்கு அனுப்புவதற்கான அனுமதியை பெற்றுள்ளது. சீன அதிகாரிகள் முதலில் ஒத்துக்க கொள்ளாத நிலையில் தற்போது எங்கள் நாட்டை சேர்ந்தவர்களை மீட்க அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து சீனாவிடம் வலியுறுத்திய நிலையில் இரண்டாவதாக ஒரு விமானம் நாளை சீனா கிளம்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |