இலங்கையில் உள்ள காலிமுகத் திடலில் இருந்து ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் ஆரம்பித்தார்கள். ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு பின்னர் தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கின்றார்கள்.
ஏற்கனவே காவல்துறையினர் கடந்த ஐந்தாம் தேதிக்கு முன்பாக இந்த காலிமுகத் திடலில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என்று அறிவித்திருந்த போதிலும் நீதிமன்றம் இம்மாதம் பத்தாம் தேதி வரைக்கும் அவர்கள் அங்கு தங்கி இருக்கலாம் என்று அறிவித்திருந்தது.
கடந்த ஐந்தாம் தேதிக்கு முன்னதாக அங்கு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள் இருந்தனர். அதன் பிறகு சில அமைப்புகள் போராட்டம் நடத்தியநிலையில் அவார்களாம் தற்போது வெளியேறி இருக்கிறார்கள். இறந்தபோதிலும் கூட அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் புது வடிவில் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.