சவுதி அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்று அறிவித்திருக்கிறது.
சவுதியின் நகராட்சி மற்றும் கிராம விவகாரத்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் வரும் ஆகஸ்டு முதல் தேதியிலிருந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள், வணிக மையங்கள், உணவகங்கள், மால்கள், சிறிய கடைகள், மார்க்கெட்டுகள் ஆகிய பொது இடங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும் சலூன் கடைகள், பார்ட்டி ஹால்கள், உணவகங்கள், கஃபேக்கள், அழகு நிலையங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி செலுத்திய சான்றிதழைக் காண்பிக்க வேண்டும். மேலும் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதியிலிருந்து நாட்டு மக்கள் அனைவரும் பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்பே உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.