பிரிட்டன் நாட்டில் தற்போது மன்னராக சார்லஸ் பொறுப்பேற்று இருப்பதால், பணத்தாள்களில் இருக்கும் மகாராணியின் உருவம் நீக்கப்படுமா? என்பது குறித்து பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கிறது.
பிரிட்டன் நாட்டின் மகாராணியாரின் மறைவை அடுத்து நாட்டில் தேசிய கீதம் போன்ற பல விஷயங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நாட்டின் பணத்தாளில் மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, அதில் மாற்றம் செய்யப்படுமா? அப்படி மாற்றம் செய்யப்பட்டால், இதற்கு முன்பு நம்மிடம் இருக்கும் மகாராணியின் உருவம் கொண்ட பணத்தை என்ன செய்வது? என்று மக்களுக்கு பல குழப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது.
தற்போது இதற்கான பதில் இங்கிலாந்து வங்கியால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மகாராணியாரின் உருவம் இருக்கும் பணம் பயன்பாட்டில் இருந்து நீங்காது. அதே சமயத்தில் புதிதாக பதவியேற்றிருக்கும் மன்னரின் உருவம் பணத்தாளில் பொறிக்கப்படும். இரண்டு பணமும் ஒரே நேரத்தில் பயன்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.