திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மாற்றுக்கட்சியில் இருந்து திமுக வந்துள்ள உங்கள் வரவு என்பது வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 39 தொகுதிகளின் 39-ம் திராவிட முன்னேற்றக் கழகம் நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
-அறிவிக்கின்ற மகத்தான வேட்பாளர்கள் ஒரு மகத்தான வெற்றியை பெற்றார்கள் என்பதற்கு இயக்கத்திலே இணைந்து பணியாற்றிட வேண்டும். நோட்டாவோடு போட்டி போடக்கூடிய இயக்கங்கள் மூளையற்ற மூடர் கூட்டம், முழங்கால் தண்ணீரில் படகோட்டி நாடகம் போடும் முப்பொழுதும் பொய்கள், பேசமுறையின்றி ஆடும் முடிவில் உண்மை தானே இறுதிவரை வாழும்.
தமிழகம் வாழ வேண்டும் என்றால் தளபதி அவர்களே ஆள வேண்டும், கருப்பு சிவப்பு கரை கொண்ட வேட்டி கட்டிய ஈட்டிகளால் திரண்டு இருக்கும் திராவிட சொந்தங்களை என்னாலும் மன்னவர் காட்டிடும் வழிநடப்போம், ஒற்றை செங்கல் கொண்டு செங்கோல் வென்ற சின்னவர் சொல் கொண்டு வென்றிடுவோம் என தெரிவித்தார்.