முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு தற்போது மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எதிர்பார்த்த விஷயமாகத்தான் இந்த அறிவிப்பு உள்ளது.பாஜகவில் 10 துணைத் தலைவர்கள் இருக்கிறார்கள். தற்போது அதற்கு அடுத்தபடியாக அண்ணாமலையும் இணைந்து இருக்கிறார்.
அவருக்கான முக்கியத்துவத்தை கட்சி தற்போதிலிருந்து கொடுத்து வருகிறது. பாஜகவின் அடிப்படை உறுப்பினராக கடந்த 3 நாட்களுக்கு முன்பாக டெல்லியில் தேசியத் தலைவரை சந்தித்து இணைந்த நிலையில் அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவியானது கொடுக்கப்பட்டிருக்கிறது.