Categories
மாநில செய்திகள்

அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி…. பல கோடி ரூபாய் செலவில் 2 புதிய கட்டிடங்கள்…. முதல்வர் மு.க.ஸ்டாலின்….!!!

சென்னையில் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் ரூபாய் 8.74 கோடி செலவில் 2 புதிய கட்டிடங்களை முதல்வர் முக ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் முக்கிய பயிற்சி மையமாக விளங்குகிறது. மேலும் புத்தக பயிற்சிகள் அளிப்பது அரசு ஊழியர்களின் பணித் திறனை மேம்படுத்துவது போன்றவை கல்லூரியின் முக்கிய நோக்கமாகும். இதற்கிடையில் கடந்த ஆண்டு சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூயில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது அங்கு  குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 வகுப்பறைகளும் 48 விடுதி அறைகளும் உள்ளன.

இதனைத் தொடர்ந்து  அளிக்கப்படும் பயிற்சிகளை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் ரூபாய் 8.74 கோடி செலவில் 6 ஸ்மார்ட் வகுபறைகளும், 15 புதிய அறைகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின்  நேற்று திறந்து வைத்தார். அந்நிகழ்வில் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனருமான வெ. இறையன்பு, தலைமை செயலாளரும், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மனித வள மேலாண்மை துறை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |