அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பெயரில் ஆட்சி செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை என்று மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் , பேருந்து நிலையங்களில் , அரசுக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் , பேருந்து நிலையம் உட்பட அரசு கட்டடங்களில் டெங்கு பரப்பக்கூடிய அழுக்குகள் இருக்கக்கூடிய ஒரு சூழலிலே அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் வீரியமாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசுகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் ஆட்சி செய்து இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி அரசு முற்றிலுமாக மத்தியில்ஆட்சி செய்து இருக்கக்கூடிய மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அடிபணிந்த ஒரு அரசாக , சமூக நீதியை குழி தோண்டிப் புதைக்கின்ற அரசாங்கமாக திகழ்கிறது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப் பட்டிருக்கிறது. அந்த அறிக்கையிலும் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு தமிழகத்தில் நடைமுறையில் இருக்கக்கூடிய இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட மாட்டாது என மத்தியஅரசாங்கத்தின் சட்டம்தான் பின்பற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாக இருக்கின்றது.
மேலும் பல் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பில் இட ஒதுக்கீடு கிடையாது என்று மத்திய அரசாங்கத்தின் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி அரசு ஏற்றுக் கொண்டிருப்பது அண்ணாவின் பெயரிலேயே ஆட்சி செய்வதற்கும் , எம்ஜிஆர் , ஜெயலலிதா பெயரில் ஆட்சி செய்வதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
நாளையதினம் நடைபெறுகின்ற கூடிய நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு எதிராக செயல்பட்டு, மத்திய அரசாங்கத்திற்கு அடிவருடியாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனை காவு கொடுக்க கூடிய அதிமுகவுக்கு சரியான , தக்க பாடத்தை நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி வாக்காளர் பெருமக்கள் கற்பித்துக் கொடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.