Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்கு போன போது… வசமாக மாட்டி கொண்ட வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் மற்றும் புளியங்குடி பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து மது பாட்டில்கள் திருடி செல்கின்றனர் என்று அடிக்கடி காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் என்பவர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்தப் உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கடையநல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக மூன்று நபர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் நிறுத்தி நடத்திய விசாரணையில் அவர்கள் மேலக்கடையநல்லூர் பகுதியில் வசிக்கும் சொர்ணகுமார், 18 வயதுடைய வாலிபர் மற்றும் மனோகரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 3 பேரும் புளியங்குடி மற்றும் கடையநல்லூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை  திருடி சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் அவர்கள் மதுபாட்டில்கள் திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |