மோட்டார் சைக்கிள் திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கீழ் மசூதி தெருவில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தர்மபுரி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது உழவர் சந்தையின் வெளிப்பகுதியில் ஆனந்தராஜ் தன் மோட்டார்சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார்.
இதனையடுத்து ஆனந்தராஜ் மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது அது காணாமல் போய்விட்டது. அதன்பின் ஆனந்தராஜ் தனது மோட்டார் சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆனந்தராஜ் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.