அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியருக்கு ரூபாய் 10 லட்சமும் உதவியாளருக்கு ரூபாய் 5 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் போன்ற மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரேமா தலைமை தாங்கியுள்ளார். மாவட்ட பொருளாளர் மாலதி முன்னிலை வகுத்துள்ளார். மாவட்ட தலைவர் மாலதி சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முருகையன், கிராம உதவியாளர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர். அப்போது அங்கன்வாடி ஊழியர்கள் தரையில் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.