பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா நடிக்க உள்ளதாக வெளியான செய்தி குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சித்ரா. கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைதான் என்றாலும் அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் முல்லை கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்கப் போகிறார்கள் என்று கேள்வி எழுந்தது. இதற்கு விடையாக சமூக வலைத்தளத்தில் பலரும் நடிகை சரண்யா கூறிவந்தனர். அவர் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து, ரன் சீரியல்களில் நடித்துள்ளார்.
சித்ராவின் நெருங்கிய தோழியாக இருந்து வந்த சரண்யா அவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கூட அவருடன் இருந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் நடிகை சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நான் நடிப்பதாக வெளியான செய்தி உண்மை இல்லை. முல்லை கதாபாத்திரத்திற்கு சித்ராவுக்கு பதிலாக யாரும் மாறாக இருக்க முடியாது. முல்லையாக அவள் பெற்ற அங்கீகாரம் கடைசி வரை அப்படியே இருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.