ஆண்ட்ரியாவின் புது முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. பன்முகத் திறமை கொண்ட நடிகை ஆண்ட்ரியா சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவர். அதன்படி இவர் ஏராளமான சமூக பிரச்சினைகளுக்கு தனது குரலை எழுப்பி கேள்வி கேட்டுள்ளார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ள ஆண்ட்ரியா தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் இருக்கிறார்.
இவ்வேளையில் வீட்டில் இருக்கும் ஆண்ட்ரியா தனது நேரத்தை வீணாக்காமல் அவரது வீட்டு மொட்டை மாடியில் ஒரு அழகிய தோட்டம் ஒன்றை அமைத்து அதனை பராமரித்து வருகிறார். இதன் மூலம் அவர் இயற்கை மீதும் அன்பு கொண்டவராக ஆகிறார். ஆண்ட்ரியாவின் இச்செயலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.