குட்டி நாயை வைத்து நடிகை ஆண்ட்ரியா செய்யும் உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து தற்போது ஆண்ட்ரியா முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஒரு அழகான குட்டி நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த உடற்பயிற்சி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/CO2DgHzjLxM/?igshid=12yfgddjyc3yw