Categories
தேசிய செய்திகள்

கசிந்த எரிவாயு…. கொத்து கொத்தாக மயங்கிய மக்கள்… பின்னணி என்ன…?

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று காலை மக்கள் அனைவரும் மயங்கி விழுகிறார்கள். ஏராளமானோர் தன்னுடைய வீட்டு வாசலிலும், அங்கு ஓடும் சாக்கடைகளில் விழுந்து கிடக்கிறார்கள். மேலும் சிலர் பேர் கிணற்றில் விழுந்து கிடக்கிறார்கள், சிலர் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து விட்டார்கள். இவ்வாறு ஆந்திராவில் இன்று விடியற்காலை அதிர்ச்சி சம்பவம் நடந்தது. ஏன் நடந்தது? எதற்காக நடந்தது?

விசாகப்பட்டினத்தில் விஷவாயுக் கசிவால் கொத்து கொத்தாக சாலையில் மயங்கி விழும் மக்கள். மயங்கி விழுந்ததில் பலர் மரணம் அதாவது 10க்கும் மேற்பட்டோர் மரணம் ஒரு குழந்தை உட்பட. தொழிற்சாலை அருகிலுள்ள 3  கிராமங்கள் காலி செய்யப்பட்டன. ஊரடங்கால் 40 நாட்கள் பராமரிப்பு இன்றி இருந்துள்ளது. 40 நாள் பொறுத்து திடீரென ஆரம்பித்தவுடன் ரசாயன மாற்றங்கள் அதிகப்படியான சூடு 40 நாள் பராமரிப்பு இல்லாததால் அதில் இருந்து விஷ வாயு கசிந்து 3 கிலோமீட்டர் வரை பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கிருக்கும் மக்கள், “திடீரென கண் எரிச்சல் ஏற்பட்டது, மூச்சு திணறல் ஏற்பட்டது, தோல் எரிச்சல் ஏற்பட்டது, கசிந்த விஷ வாயு நரம்பு மண்டலத்தையும் மற்ற உறுப்புகளையும் பாதித்திருக்கலாம் என  ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளனர். ரசாயனங்களை சுற்றி மூன்று கிலோமீட்டர் பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி ஈரத்துணியை முகத்தில் கட்டுவதற்கு அறிவுறுத்தியது. பாலிஸ்டரின் என்ற ஒரு விதமான உபகரணங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் இங்கு தயாரிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிவாரணம் அளிப்பதாக ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார். இந்திய மக்களுக்கு 1984 இதுபோன்று சம்பவம் இதை விட இன்னும் மிகப் பெரிய கொடிய சம்பவம் என்று சொல்லலாம். போபால் விஷவாயு கசிவில் ஒரு லட்சம் பேர் பாதிப்படைந்து சுமார் 3500 பேர் மரணம். இந்த நினைவுகளை இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவு மக்கள் அங்கங்க மயங்கி விழுந்த பலர் உயிரிழந்து நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் பாதிப்படைந்துள்ளது நினைவுபடுத்தியது என தெரிவித்துள்ளனர்

Categories

Tech |