Categories
தேசிய செய்திகள்

எந்தப் போட்டியும் நடத்தக்கூடாது… சொன்னதை கேளுங்க…. எச்சரித்த அரசு…!!

ஆந்திராவில் மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி மாடு விடும் விழா மற்றும் சேவல் சண்டை போன்ற போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது ஆந்திர பிரதேச மாநிலத்தில் மகா சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேவல் சண்டை  மற்றும் ஜல்லிக்கட்டு நடப்பது போல, அங்கும் சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா போன்ற போட்டிகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனைப்பற்றி சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறும்போது, வருகின்ற 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் முழுவதும் மகர சங்கராந்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது கிராமங்களில் மாடு விடும் விழா மற்றும் சேவல் சண்டை போன்ற போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாடு விடும் விழா மற்றும் சேவல் சண்டை போன்ற போட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விதியை மீறி போட்டிகளை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக சித்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு தாசில்தார்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் அரசால் விதிக்கப்பட்ட தடையை மீறி மாடு விடும் விழா மற்றும் சேவல் சண்டை போன்ற போட்டிகள் நடத்துவது தெரியவந்தால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |