கொரோனா நெருக்கடியிலும் கூட பிரதமர் ட்விட்டரில் விமர்சனங்களை நீக்குவதில் தான் அதிக கவனம் செலுத்துவதாக தி லான்செட் மருத்துவ இதழ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து கொண்டு இருக்கின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தி லான்செட் மருத்துவ இதழ் ஒன்று மோடி கொரோனா பரவலை கையாண்டதைக் குறித்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளனர்.
அதில் நோய்களை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்வதை விட ட்விட்டரில் தேவையற்ற விமர்சனங்களை நீக்குவதில் பிரதமர் மோடி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறினார். இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக பல லட்சம் இழப்புகள் உண்டாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்திய அரசு, மத விழாக்களை அனுமதித்தன் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் ஒன்று கூடியதால் கொரோனா தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் தடுப்பூசி திட்டமும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மோடி அரசு தடுப்பூசி பிரச்சாரத்தை மேற்கொள்வதிலேயே தீவிரம் காட்டி வருகின்றது. மக்கள் தொகையில் 2% குறைவானவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை மிகுந்த விரைவிலும் செயல்படுத்த மோடி அரசு தவறி வருகிறது என்று பல்வேறு விமர்சனங்களை மத்திய அரசு மீது வைத்து இந்த கட்டுரையை தி லான்செட் மருத்துவ இதழ் எழுதியுள்ளது.