போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.
தேனி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி சுபத்ரா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனது தந்தை பார்த்தசாரதி பெயரில் கோபாலபுரம் பகுதியில் 12.5 சென்ட் நிலம் இருக்கிறது. போலி ஆவணங்கள் மூலமாக அந்த நிலத்தை கோபாலபுரத்தைச் சேர்ந்த திருவேங்கடம்மாள் தனது மகன் குலோத்துங்கன் பெயரில் தானமாக எழுதிக் கொடுத்திருக்கின்றார்.
அதற்காக ஆவண எழுத்தர் பிரவீன் குமார் போலியான ஆவணம் தயாரித்து கொடுத்து இருக்கின்றார். தேனியைச் சேர்ந்த தாமஸ்ராஜ் மற்றும் செல்வேந்திரன் உள்ளிட்டோர் அதில் கையொப்பமிட்டு அந்த ஆவணத்தை சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்து கொடுத்திருக்கின்றார். ஆகையால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் திருவேங்கடம்மாள் குலோத்துங்கன், பிரவீன் குமார், தாமஸ் ராஜ், செல்வேந்திரன், சார் பதிவாளர் விமலா உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.