பா.ம.க இளைஞர் அணியின் தலைவராகவும், மக்களவையின் உறுப்பினராகவும் இருக்கும் அன்புமணி ராமதாஸ் இணையதள சூதாட்டத்திற்கு எதிராக டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.
அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, சென்னையில் உள்ள கோயம்பேட்டில் வசிக்கும் தினேஷ் என்னும் இளைஞர் இணையதள சூதாட்டத்தில் அதிகமான பணத்தை இழந்து கடன் தொல்லையால் இன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்திருக்கிறார். அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐந்து மாதங்களில் இணையதள சூதாட்டத்தால் பலியாகும் 12வது உயிர் இது. இணையதள சூதாட்டம், உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். அப்படியில்லை எனில் தினசரி இவ்வாறு தற்கொலைகள் நடந்து பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வருவது சகஜமாக மாறிவிடும். எனவே, தமிழக அரசு இணையதள சூதாட்டத்தை தடை செய்ய மேலும் தாமதிக்க கூடாது.
தமிழ் மக்களை காப்பாற்ற இணையதள சூதாட்டத்தை தடை செய்வதற்கு அவசர சட்டத்தை அனைத்து காரணங்களோடு, உடனே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.