Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி’… பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ரியோவின் முதல் பதிவு…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ரியோ தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார் .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  பிக்பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவுபெற்றது . இறுதிப் போட்டிக்கு தேர்வான 5 போட்டியாளர்களில் ஆரி 16 கோடி வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தார் . இதையடுத்து பாலாஜி இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர் . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ரியோ தனது முதல் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் .

rio first post after biggboss4tamil ரியோ வெளியிட்ட முதல் பதிவு

அதில் ‘எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா ? நானும் இப்போது நலமாக இருக்கிறேன் . பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு ஒரு அழகான பயணம் . நான் வெளியே வந்து  நீங்கள் அனைவரும் எனக்கு கொடுத்த ஆதரவை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது ‌. எனக்கு இவ்வளவு அன்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி . அடுத்து நிறைய வேலை இருக்கிறது . அதை ஒவ்வொன்றையும் பிளான் செய்து செய்வோம்’ என்று கூறியுள்ளார்.

Categories

Tech |