Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிடும் டிரை ப்ரூட்ஸ் பொங்கல்..!!

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.. டிரை ப்ரூட்ஸ் பொங்கல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பிரவுன் ரைஸ்                  – 1 கப்
தண்ணீர்                             – 4 கப்
முந்திரி                                – 12
உலர்திராட்சை                – 12
முந்திரி                                 – 7
பாதாம்                                 – 12
பிஸ்தா                                 – 12
பேரீச்சை சிரப்                 – 1 கப்
நெய்                                       – 1 ஸ்பூன்
பேரீச்சை                              – 5 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் முந்திரி, பிஸ்தா, பாதாம், கிஸ்மிஸ் பழம் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் மிக்சி ஸாரில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு அரிசியைக் கழுவி 3 கப் தண்ணீர் விட்டு பொங்கல் பானையில் ஊற்றி சேர்த்து வேக விட வேண்டும்.

அரிசி நன்றாக வெந்து குலையும் அளவிற்கு வந்ததும், அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை அதோடு சேர்த்து வேக விடுங்கள்.  அரிசி நன்கு வெந்ததும், டேட்ஸ் சிரப்பை சேர்த்துக் கலந்து வேகவிடுங்கள்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும்  முந்திரி, நறுக்கிய டேட்ஸ் சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்தெடுத்து பொங்கலில் சேர்த்துக் ஊற்றி கிளறி இறக்கி சூடாக பரிமாறி சாப்பிடுங்கள். சுவையான டிரை ப்ரூட்ஸ் பொங்கல் ரெடி..!

Categories

Tech |