Categories
உலக செய்திகள்

“தலைக்கு ஏறிய மதுபோதை”… கடைக்குள் மோசமான செயலில் ஈடுபட்ட பெண்… கைது செய்த போலீஸ்…!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் மது போதையில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரை சேர்ந்தவர் 53 வயதுடைய மெலிசா டவுன்.  இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள மதுபான விடுதிக்கு சென்று உள்ளார். பின்னர் மது அருந்திவிட்டு தான் கொடுக்க வேண்டிய $154 பணத்தை கிரெடிட் கார்ட் மூலம் செலுத்த மெலிசா முயன்றுள்ளார். ஆனால் அவரால் கிரெடிட் கார்ட் மூலம் பணத்தை செலுத்த முடியாமல் போயுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மெலிசா அங்கிருந்தவர்களை பார்த்து  கோபமாக கத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் மீது எச்சில் துப்பி விட்டு விடுதியிலிருந்து  தப்பித்து வெளியே ஓடி வந்துள்ளார். அதற்கு பிறகு அருகிலிருந்த கடைக்குச் சென்ற மெலிசா தனது ஆடைகள் அனைத்தையும் களைந்து விட்டு  நிர்வாணமாக கடைக்குள் ஓடியுள்ளார்.

இதனால் கடையிலிருந்தவர்கள் மெலிசா செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் மெலிசா கடையில் இருந்த ஒரு ஆடையை திருடி அணிந்து கொண்டார். மேலும் அந்த கடையில் இருந்த சில பொருட்களையும் உடைத்து விட்டு அங்கிருந்து  தப்பித்து ஓடியுள்ளார். அந்த கடையில் மட்டும் மெலிசாவால் $740.50 மதிப்புள்ள பொருட்கள் வீணாக போனது.

இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் பேரில் காவல்துறையினர் மெலிசாவை அருகிலிருந்த மற்றொரு மதுபான விடுதியில் வைத்து கைது செய்தனர். அவர் மீது திருட்டு, அநாகரீக செயல்களில் ஈடுபடுவது போன்ற வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |