Categories
உலக செய்திகள்

இது “செக்ஸ் கியூர்” பண்ணா தான் சரியாகும்….! பெண்ணிடம் சில்மிஷம் செய்த மருத்துவர்…. அம்பலப்படுத்திய தொலைக்காட்சி….!!

இத்தாலியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் குழந்தைப் பேறு இல்லை என்று சென்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசியதை தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

இத்தாலியில் “மேஜிக் ஃபுளூட்” என்று செல்லமாக அழைக்கப்படும் மகப்பேறு மருத்துவரான கியோவானி மினியெல்லோ ( வயது 60 ) குழந்தை பாக்கியம் இல்லை என்று வந்த பெண்ணிடம் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். மேலும் “சிறு மார்பகங்கள் கொண்ட பெண்களின் ரசிகன் நான் ” என்று கூறி அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் குழந்தை பாக்கியம் இல்லை என்று சென்ற அந்த பெண்ணிடம் “உங்களுக்கு பாலியல் ரீதியாக தொற்றிய டிஎன்ஏ வைரஸ் இருப்பதாகவும், தன்னுடன் செக்ஸ் வைத்து கொண்டால் குழந்தை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்” என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண், மருத்துவரின் இந்த பாலியல் ரீதியான சீண்டல்களை ஒரு தொலைக்காட்சியில் கூறி அழுத்துள்ளார். அதன் பிறகு அந்த தொலைக்காட்சி நிறுவனம் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை “குழந்தை இல்லை, சிகிச்சை தேவை” என்று மருத்துவர் கியோவானி மினியெல்லோ-விடம் கூறுமாறு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மருத்துவர் கியோவானி மினியெல்லோ அந்த பெண்ணிடம் கூறியது போலவே “செக்ஸ் சிகிச்சை”யை பரிந்துரை செய்துள்ளார். மேலும் தான் 2 டோஸ் வேக்சின் போட்டு கொண்டுள்ளதால் தன்னுடைய உடல் நோய் எதிர்ப்பு சக்தி உங்களுக்கும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு சிகிச்சைக்காக அந்தப் பெண்ணை ஓட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்ற மருத்துவர் கியோவானி மினியெல்லோ அங்கு தனது உடைகளை களைந்துள்ளார். அப்போது உள்ளே புகுந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர் அரை நிர்வாணமாக இருந்த அந்த மருத்துவரை கையும் களவுமாக பிடித்துள்ளார். இருப்பினும் அந்த மருத்துவர் “நான் இதை ஆய்வுக்காக தான் செய்கிறேன், இப்படி நான் பலரை காப்பாற்றியுள்ளேன்” என்று கூறி மலுப்ப தொடங்கியுள்ளார். இந்த சம்பவம் அம்பலமான பிறகு கிட்டத்தட்ட 15 பெண்களிடம் அந்த மருத்துவர் கைவரிசையை காட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த மருத்துவர் தனது வேலையையும் ராஜினாமா செய்துள்ளார்.

Categories

Tech |