Categories
உலக செய்திகள்

“தந்தையின் இறுதிச் சடங்குக்கு போகணும்” விசா கேட்ட இந்தியப்பெண்…. தூதரக அதிகாரியின் செயல்…. வெளியான காணொளி….!!

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக விசா கேட்டு சென்ற இந்திய பெண்ணிடம் தூதரக அதிகாரி ஒருவர் நடந்து கொண்ட செயல் காணொளியாக வெளியாகியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த தூதரக அதிகாரி ஒருவர் அந்த பெண்ணை “வெளியே செல்லுங்கள்” என்று கூறி வெளியேற்றியுள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த பெண் தனது செல்போனில் அங்கு நடந்ததை வீடியோவாக எடுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் “இவர்தான் விசா கொடுக்கும் பணியை கவனித்து வரும் பொறுப்பு அதிகாரி விஜய் ஷங்கர் பிரசாத். இவருடைய பதவிக்கு தகுந்த செயலா இது?” என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அந்த பெண்ணிடம் விசா வழங்க வேண்டிய இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கோபத்துடன் நடந்து கொண்டுள்ளார். மேலும் அந்த பெண் விசாவிற்காக விண்ணப்பித்த கட்டணத்தையும் அவரிடமே திருப்பி கொடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் “எதற்காக எனக்கு விசா இல்லை என்று சொல்கிறீர்கள் ? ஏன் கோபத்துடன் நடந்து கொள்கிறீர்கள் ?” என்று கேட்டுள்ளார்.

ஆனால் அந்த அதிகாரி எதற்கும் பதில் சொல்லாமல் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து வீடியோவை பார்த்த சிலரின் உதவியுடன் அந்தப் பெண் இந்தியாவிற்கு வந்துள்ளார். அதன் பிறகு தனது தந்தைக்கு இறுதி சடங்கையும் செலுத்தியுள்ளார். மேலும் அந்த பெண் தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பில் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |